Saturday, 12 January 2013

என்.ஸி.டி.ஔவையார்..



அன்பிற்குரிய குழந்தைகளே...அச்சமின்றி பள்ளிக்கு வாருங்கள்.....
ஆரோக்கியமாய் வாழ்ந்திட ஆலோசனை கேளுங்கள்.............
இதய நலம் காத்திட உடறபயிற்சி செய்யுங்கள்...................
ஈகையுடன் வாழ்ந்திட உள்ளத்தை மகிழ்ச்சியாய் வைத்திருங்கள்.......
உண்ணும் உணவில் உப்பை அளவோடு சேருங்கள்............
ஊன்றுகோலாய் இருக்கிறோம் உறசாகமாய் வாழுங்கள்............
எடையை உயரத்திறகு ஏற்ப வைக்க முயற்சி செய்யுங்கள்..........
ஏகாந்தமாய வாழ்ந்திட பெறறோர்களே புகை மது தவிருங்கள்...
ஐயமின்றி கற்றிட மெர்குரி பள்ளிக்கு வாருங்கள்...........
ஒவ்வொரு குழந்தைகளும் சுகாதாரமாக இருங்கள்.....
ஓராண்டில் மாறிடும் ஒளிமயமான தமிழகம்.......
ஔவை சொன்னது பழமொழி......
இது மெர்குரி பள்ளியின் புதுமொழி.......



மாறுவேட போட்டியில் 
முதல்பரிசு பெற்ற மாணவி  த.ஜனப்பிரிய தர்ஷினி.
நான்காம் வகுப்பு.
மெர்குரி நர்சரி பிரைமரி பள்ளி
அரிமழம்,புதுக்கோட்டை மாவட்டம்.

Monday, 7 January 2013

தொற்றா நோய்கள் கண்டறிதல் விழிப்புணர்வு முகாம்

பாரதிதாசன் பல்கலை கழகத்தை சேர்ந்த நைனா முகமது கலைகல்லூரியின் சார்பில் அறந்தாங்கி,தொவன்காடு கிராமத்தில் மாணவர்கள் பங்கேற்ற தேசிய சமூக பணிகள் முகாம் நடைபெற்றது..அம்முகாமில் பங்கேற்ற தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்மரு சுபாஷ் காந்தி தொற்றாநோய்கள் கண்டறிதலின் முக்கியத்துவம்,மற்றும் பயன்கள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்.அம்முகாமில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர் 



Tuesday, 1 January 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்


இன்று புதிதாய் பிறந்தோம் 
இனிதாய் நலமாய் வாழ்ந்திடுவோம் 
2013 ஆம் ஆண்டினிலே 
12 மாதங்களும் மகிழ்ச்சி நிறைந்ததாய் 
53 வாரங்களும் வேடிக்கை நிறைந்ததாய் 
365 நாட்களும் வெற்றி நிறைந்ததாய் 
8760மணிகளும் ஆரோக்கியம் நிறைந்ததாய் 
525600நிமிடங்களும் அதிருஷ்டம் நிறைந்ததாய் 
31536000நொடிகளும்  நன்மை பயப்பதாய் 
2013ஆண்டே சாதனை படைக்கும் ஆண்டாய் 
விளங்கிட அனைவரையும் வாழ்த்துகிறோம்